நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் கொச்சுவேளி வரை நீட்டிப்பு
நாகர்கோவில்-திருவனந்தபுரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கொச்சுவேளி வரை நீட்டித்து வரும் மார்ச் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: - ரயில் எண் 06428 நாகர்கோவில் சந்திப்பு-திருவனந்தபுரம் சென்ட்ரல் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் கொச்சுவேளி சந்திப்பு வரை நீட்டித்து மார்ச் 1ம் முதல் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் நேர மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சந்திப்பில் இருந்து மாலை 6.30க்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20க்கு புறப்படும் இந்த ரயில் 6.27க்கு நாகர்கோவில் டவுன், 6.33க்கு வீராணி ஆளூர், 6.44 இரணியல், 6.52 பள்ளியாடி, இரவு 7 மணிக்கு குழித்துறை, இரவு 7.05 குழித்துறை மேற்கு, 7.11 பாறசாலை, 7.16 தனுவச்சபுரம், 7.21 அமரவிளை, 7.27 நெய்யாற்றின்கரை, 7.32 பாலராமபுரம், 7.40 நேமம், 7.55 திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்று 8.20 கொச்சுவேளி சென்றடையும். திருவனந்தபுரத்தில் 3 நிமிடங்களும், இதர நிறுத்தங்களில் ஒரு நிமிடமும் இந்த ரயில் நின்று செல்லும்.
Next Story