சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கை அறிவிப்பு நீட்டிப்பு

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கை அறிவிப்பு நீட்டிப்பு

பைல் படம் 

அரியலூர் மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கை அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த உதவி, அரசு திட்டங்கள் மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்து செல்வதற்காக மொத்தம் 50 "சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers)" தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே 30.04.2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

மேலும், விருப்பமுள்ள சமூக அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். சட்டப்பணிகள் தன்னார்வலர் பணிகளுக்கு, குறிப்பாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்ட பிரிவினர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட) . ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். . MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அங்கன்வாடி பணியாளர்கள். . மருத்துவர்கள். . சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை) . சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் கட்சி சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள்) மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள் . திருநங்கைகள் .அடிப்படை கல்வி தகுதி (கணினி அறிவுடன்) உடைய சேவை மனப்பான்மை உள்ளவர்கள் . மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவில் பணிபுரிகின்ற தன்னார்வ சட்டப் பணியாளர்களில் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர். மேற்கண்ட பிரிவினர்கள் சட்ட தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை https://ariyalur.dcourts.gov.in/ என்ற அரியலூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் மே 30 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் தபால் மூலமாக (அ) அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் (அ) ஜெயங்கொண்டம் / செந்துறை வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள். தேர்வு செய்யப்படாதவர்களின் விவரம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் https://ariyalur.dcourts.gov.in/ என்ற அரியலூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். குறிப்பு: மேற்படி பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம். தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. மேற்படி பணியில் இணையும் நபர்களது பணியினை தன்னார்வலர்களாக மட்டுமே கருதப்படும். நிரந்தர பணியென கருத இயலாது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு (அ) வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அனுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story