குற்றால அருவியில் குளிக்க இரவு 8 மணிவரை அனுமதி நீட்டிப்பு

குற்றால அருவியில் குளிக்க இரவு 8 மணிவரை அனுமதி நீட்டிப்பு

  பழைய குற்றாலம் அருவியில் குளிக்க இரவு 8 மணி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க இரவு 8 மணி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் இரவு 8 மணி குளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் நீராடும் நேரத்தை நீடிக்கக் கோரி பொதுமக்கள், விவசாயிகள், வா்த்தக பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையின்படி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீராடும் நேரம் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி சுற்று வட்டாரப் பகுதி ஆட்டோக்கள் பழைய குற்றாலம் அருவியின் பிரதான வாயில் வரை சென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றி வரவும் அனுமதியளிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் பிரதான வாயிலில் உள்ள வாகனம் நிறுத்துமிடம் வசதியை பயன்படுத்தக்கூடாது. பழைய குற்றாலம் அருவியில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. அருவி பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கேரிபேக் பயன்படுத்த அனுமதியில்லை. குடி போதையில் அருவியில் எவரும் நீராட அனுமதியில்லை.

பழைய குற்றால அருவியின் மேல் பகுதியில் ஏற்படும் நீா்வரத்து மற்றும் வெள்ளப்பெருக்கின் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்ப நீராடுவதற்கான அனுமதி காவல் துறையினரால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அவ்வப்போது காவல் துறை மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பின்பற்ற வேண்டும். மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக நீராடுவதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

Tags

Next Story