சிவராஜ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு !
சிவராஜ் மருத்துவ கல்லூரி
சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரி தலைவர் சிவராஜ் கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான இயற்கை மற்றும் யோகா மருத்துவ பட்ட படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (இயற்கை மற்றும் யோகா மருத்துவம்) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டப்படிப்புக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்ப கட்டணம், பிற கட்டண விவரங்கள், கலந்தாய்வுக்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பப்படிவங்கள் இயக்குனரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு ஆயுஷ்முறை மருத்துவ கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை- 600106 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.