வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தர்மபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள், வரும் 12ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணிகளானது கடந்த 27.10.2023ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடி அமைவிடங்களில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

மேலும் 27.10.2023 முதல் 9.12.2023 வரை வரப்பெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் 26ம்தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணி வரும் 12ம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். அதனடிப்படையில்,இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 22ம் தேதி அன்று வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story