சிறுகுறு விவசாயிகளிடம் ராகி கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு

சிறுகுறு விவசாயிகளிடம் ராகி கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு

மாவட்ட ஆட்சியர் சாந்தி 

தர்மபுரி மாவட்டத்தில் சிறு குரு விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்வதற்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சி சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்வதற்கு சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றிற்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுகுறு விவசாயிகளிடம் இருந்து ராகி கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு நிலையில் தர்மபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் பென்னாகரம் வண்ணாத்திப்பட்டியல் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடம் அரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய இடங்களில் ராகி நேரடியாக கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்வதற்கான காலடிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை சிறு குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் சாகுபடி செய்த ராகியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து உரிய சிட்டா அடங்கல் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் எண் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு கொள்முதல் நிலையங்களில் உள்ள ராகியை விற்பனை செய்யலாம் விற்பனைக்கு கொண்டு வரும் ராகியை கல் மண் மற்றும் தூசி போன்றவற்றை சுத்தமாக கொண்டு வர வேண்டும். அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகையான ஒரு குவின்டால் 38,460 ஆகும் இதன் படி கிலோ ஒன்றுக்கு 38.46 ரூபாய் என்ற அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறும் தினமும் காலை 9 மணி முதல் 1.30 மணி வரைக்கும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரைக்கும் இந்த அலுவலகங்களில் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story