அனுமதியற்ற மனை பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு
ஆட்சியர் சாருஸ்ரீ
அனுமதியற்ற மனை பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
அனுமதி அற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணைகளில் விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் கால நீட்டிப்பு பிப்ரவரி 29ஆம் தேதி முடிய உள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story