ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
X

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

ராணிப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் 2024-25-ம் ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது வரும் 13-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்ய முடியாத மாணவர்கள், ராணிப்பேட்டை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரத்திற்கு [email protected] மற்றும் [email protected] ஆகிய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story