திருநெல்வேலியில் ரயில் ரத்து நீட்டிப்பு

X
திருநெல்வேலியில் ரயில் ரத்து நீட்டிப்பு
வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
திருநெல்வேலியில் கடந்த 17,18ஆம் தேதி பெய்த மழையால் ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் நாளை (31-ந்தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
