கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
சாராய ஊரல் அழிப்பு
கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னதிருப்பதி கிராமத்தில் உள்ள சுனை பாறை ஓடை அருகே, பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 5 பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
Next Story