தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி !

தனியார் நிறுவன ஊழியரிடம்  வழிப்பறி !

கைது

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அழகாபுரம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் சிவராஜ், தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பெரியபுதூரை சேர்ந்த உலகநாதன் (வயது 26) என்பவர் அங்கு சென்று அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் திடீரென்று அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2,400 பறித்துக்கொண்டு சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர்.

Tags

Next Story