சின்னப்பேராளியில் பெண்களிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
காவல் நிலையம்
விருதுநகர் சின்னப்பேராளி பகுதியைச் சார்ந்தவர் வேலம்மாள் இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் வேலம்மாள் தனது தாயுடன் கடந்த பத்தாம் தேதி மதியம் 2 மணி அளவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது மதுரை சார்ந்த அருண்குமார் அழகர் கவிராஜன் பாலாஜி ஆகிய நான்கு நபர்கள் மினி லோடு வேனிலும் இருசக்கர வாகனத்திலும் வந்து அவர்களை,
கத்தியை காட்டி மிரட்டி கையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டில் உள்ளே சென்று திருடச் சென்று அவர்கள் வீட்டில் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்தவர்கள் கண்ணாடி மற்றும் டிவியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது
இதை அடுத்து வேலம்மாளின் தாய் மாரியம்மாள் சத்தம் போட்டதை அடுத்து அருகில் இருப்பவர்கள் அங்கு வந்தவுடன் நால்வரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேலம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.