திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்.

திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்.

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூரில் கண் பரிசோதனை முகாம்

திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டுநர்களுக்கான ரத்த பரிசோதனை , , ரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story