டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்

டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
X

மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் ஏராளமான ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன் னிட்டு உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிட், வட்டார அரசு மருத்துவமனை சார்பில் டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதற்கு சுங்கச்சாவடி திட்ட மேலாளர் சதீஷ்கு மார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார். மேலாளர் சொர்ணமணி வரவேற்றார். இதில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் வாகன டிரைவர்கள், போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கண் பரி சோதனை மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவக்குழுவினர் செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து டிரைவர்களுக்கு கண்கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும், கண் அறுவை சிகிச்சைக்கு பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மருத்துவமில்லா சுகாதார மேற்பார் வையாளர் பத்மநாபராவ் கலந்து கொண்டு புற்று நோய் தடுப்பு குறித்து டிரைவர்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். இதில் டாக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், கண் பரிசோதகர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாதுகாப்பு மேலாளர் மனோஜ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story