டிஎன்பிஎஸ்சி தேர்வில் தோல்வி - இளம்பெண் தற்கொலை
தர்மபுரியில் 4 முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமுதா இவர் பி.இ.இ கம்ப்பூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் 4 முறை, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story