விராலிமலையில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

விராலிமலையில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!


விராலிமலையில் வருவாய்த் துறை சார்பில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.


விராலிமலையில் வருவாய்த் துறை சார்பில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விராலிமலையில் வருவாய்த் துறை சார்பில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் கருப்பையா தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி சோதனைச்சாவடி, கடை வீதி, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, மதுப் பழக்கம் மற்றும் போதை பழக்கங்கள் ஒழிய மனக் கட்டுப்பாடு மிக முக்கியம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கோட்ட கலால் அலுவலர் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் சதீஸ் சரவணக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சரவணக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story