தளி அருகே போலி மருத்துவர் கைது

ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தர்மர் தலைமையில் தேன்கனிக்கோட்டை முதன்மை மருத்துவ அலுவலர் கிரிஜா,

ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜுவ்காந்தி மற்றும் ஆந்தேவனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் கிளினிக்குகளில் போலி மருத்துவர் குறித்து ஆய்வு மேற்கொண்டனர், இந்த ஆய்வில் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான சாந்தி கிளினிக்கில் என்ற தனி அறையில் அதே கிராமத்தை சேர்ந்த தவமணி (57) என்பவர் பிஎம்எஸ் கல்வி மட்டுமே படித்து முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொது மக்களை ஏமாற்றி அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த கிளினிக்கில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து தேன்கனிக்கோட்டை முதன்மை மருத்துவ அலுவலர் கிரிஜா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் தவமணியை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story