போலி போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்

போலி போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்

போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்

தாராபுரத்தில் போலியாக நடத்தப்பட்ட மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 35 பேரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றிய அதிகாரிகள் மையத்திற்கு சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் கடந்த ஆறு மாதங்களாக எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தி வந்த நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சையின் போது இறந்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தபோது எந்தவித அனுமதியும் இல்லாமல் நடத்தியது தெரிய வந்தது.

மதுபோதைமறுவாழ்வு மையத்தில் 36 பேர் இருந்த நிலையில் ஒருவர் இறந்தார் . மற்ற 35 பேரையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மனநல மருத்துவர் வைத்து சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர் மேலும் தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story