பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

விவசாயி வேதனை

இளையான்குடி பகுதியில் பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதிகளில் கோடை காலத்தில் மிளகாய், எள், பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பருத்தி கொள்முதல் விலை உயர்வால் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் சமுத்திரம், விரையாதகன்டன், ஆளவிடங்கான்,

கரும்புகூட்டம், கோட்டையூர், பகுதிகளில் சுமார் 8000 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி விவசாயத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ80 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ60 க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே மழை குறைவான காரணத்தால் பருத்தி விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கூலியும் உயர்ந்துள்ளது, இதனால் ஏக்கருக்கு ரூ20 ஆயிரம் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விலை வீழ்ச்சியால் விவசாயிகளின் பாதிப்பை தடுக்க அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, கொள்முதல் நிலையங்களில் வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சிக்கு கோவை மற்றும் திருப்பூர் பஞ்சு நூற்பாலைகளில் கொள்முதல் செய்யாததை காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story