விலை வீழ்ச்சி - செடியில் வாடும் செண்டுமல்லி

தர்மபுரி மாவட்டத்தில் செண்டு மல்லி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர், பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டி, சாமநத்தம், வேடகட்டமடுவு, ராமதாஸ்தண்டா, ஒடசல்பட்டி, கம்பைநல்லூர், இருமத்தூர், கோட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட டுள்ளது. செண்டுமல்லி பூவிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த வருடம் சாகுபடி பரப்பு மற்றும் விளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து விலை குறைந்து கிலோ 30 வரை விற்பனையாகிறது. இதனால், கூலி மற்றும் போக்குவரத்து செலவிற்கு விலை விவசாயிகளுக்கு கூட கட்டுபடியாக ஆகாமல் அடிப்படை ஆதாரங்களை கூட இல்லாததால் செண்டு மல்லி பூக்களை பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.

Tags

Next Story