கனமழையால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் எட்டுப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் அரூர் சேலம் பைபாஸ் சாலையில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாட்டு கொட்டகைகள் காற்றுக்கு சேதமடைந்தது.

கௌப்பாறை கிராமத்தில் மரம் முறிந்து விழுந்து மாடு உயிரிழந்தது. அதேபோல் கீரைப்பட்டியில் தென்னை மரம் விழுந்தது. அச்சல்வாடி, கீரைப்பட்டி பகுதிகளில் பலத்த காற்றால் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. சாலைகளில் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்தன. மழையால் சேதமடைந்த இடங்களில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். மேலும் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்த பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story