பொய் வழக்கு - பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

பொய் வழக்கு -  பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

நீதிமன்றம் 

நாமக்கல்லில் பொய் வழக்கில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க நாமக்கல் மூத்த வழக்கறிஞரும் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளருமான செல்வராசாமணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் மாவட்ட மோகனூர் காவல் நிலைய போலீசாரால் பொய் வழக்கில் கைது செய்திருப்பதை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் தாக்கப்டுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருவது தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதையே காட்டுகிறது. நாமக்கல் வழக்கறிஞர் மணிகண்டன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்க தக்கது. எனவே தமிழகத்தின் வழக்கறிஞர்களின் பாதுகாப்பின் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியறுத்தி நவம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை இன்று ஒரு நாள் மட்டும் சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்து விலகி இருப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் சேகர் பொருளாளர் வழக்கறிஞர் சீனிவாசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story