இளைஞர் தற்கொலை பொய் புகார் எதிரொலி - திருச்செங்கோட்டில் பரபரப்பு
திருச்செங்கோடு அம்மன் குளத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக பரவிய செய்தியை அடுத்து தீயணைப்புத்துறை தேடுதல் வேட்டையில் பொய் செய்தி என தெரியவந்தது.
திருச்செங்கோடு நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மன் குளத்தில் அதிகாலையில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சி மற்றும் காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்,
அருகில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புகளை வைத்து அவர் இந்த பகுதியில் அம்மன் குளம் பகுதியில் வரவில்லை என்பதை தெரிந்து கொண்ட நகராட்சி நிர்வாகம் காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மதியம் தேடுதல் பணியை முடித்துக் கொண்டனர். இளைஞர் ஒருவர் அம்மன் குளத்தில் விழுந்ததாக செய்தி பரவிதால் அந்த அப்பகுதியில் மதியம் வரை பரபரப்பு ஏற்பட்டது.
Next Story