விண்ணப்பிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை - ஆட்சியர் தகவல் 

விண்ணப்பிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை - ஆட்சியர் தகவல் 
விண்ணப்பிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை - ஆட்சியர் தீபக் ஜேக்கப்
விண்ணப்பிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை - ஆட்சியர் தகவல் 
இந்திய உச்சநீதிமன்றம் eShram இணையதளத்தில் பதிவு செய்துள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே eShram இணையதளத்தில் பதிவு செய்துள்ள, இதுவரை குடும்ப அட்டை கிடைக்கப்பெறாத, புலம் பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களுக்கு குடும்ப அட்டை தேவைப்படும் சமயத்தில் தாங்கள் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று அதற்கான படிவத்தைப் பெற்று தங்களது சொந்த மாநிலத்தைப் குறிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். உணவுப் பொருள் வழங்கல் துறையின் கள அலுவலர்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், eShram இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்கள், தாங்கள் வசிக்கும் வட்டத்தினைச் சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் குடும்ப அட்டைக்கான படிவத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story