பிரிந்திருக்கும் கணவன், மனைவி குடும்பத்தினர் தகராறு - வழக்குப்பதிவு

X
விருதுநகரில் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் கணவன், மனைவியின் குடும்பத்தினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவருடைய தம்பி கௌதம். கௌதமின் மனைவி சந்தியாவும் ,கௌதமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கௌதமம் அவருடைய சகோதரர் விஜயலட்சுமியும் விருதுநகர் பராசக்தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அதே பகுதியில் உள்ள தனது மனைவி வீட்டில் இருந்த குழந்தையை கௌதம் தூக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கௌதமின் மனைவி சந்தியா மற்றும் அவருடைய சகோதரி அகல்யா ஆகிய இருவரும் கௌதமை தகாத வார்த்தைகள் பேசி தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற விஜயலட்சுமியை இருவரும் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி விஜயலட்சுமி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் கௌதமின் மனைவி சந்தியா மேற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மற்றொரு புகாரில் கணவர் கௌதம் அவருடைய உறவினர்களான ஆனந்த்,விஜயகுமார்,விஜயா, தமிழ்ச்செல்வி ஆகிய ஐந்து நபர்களும் கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தி தாக்கி குழந்தையை தன்னிடமிருந்து பறித்ததாக கூறி மற்றொரு புகார் அளித்துள்ளார் நிலையில் இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் இரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
