பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடந்தது
ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த தகுதி வாய்ந்த பெண்கள் 12 பேருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதில் 8 பெண்களுக்கு லேப்ராஸ்கோப், 2 பேருக்கு கருக்கலைப்புடன் கூடிய லேப்ராஸ்கோப் முறையிலும், 2 பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் அரசு அறுவை சிகிச்சை மருத்துவா்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணா் செந்தில்ராஜா உள்ளிட்டோா் சிகிச்சை அளித்தனா். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு அரசு ஊக்கத்தொகை ரூ. 600 வீதம் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பூங்கொடி, துணை இயக்குநா் (குடும்ப நலம்) வளா்மதி, வட்டார மருத்துவ அலுவலா் கா.செல்வி, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் சாா்லஸ் ராஜன், மருத்துவ அலுவலா் கோபி, வட்டார சுகாதார புள்ளியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

Tags

Next Story