திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே செல்லும் பாசஞ்சர் ரயில்களில் ரூ.20 ஆக கட்டண மாற்றம்
பாசஞ்சர் ரயில்
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே செல்லும் பாசஞ்சர் ரயில்களில் ரூ.20 ஆக கட்டண மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்தது.
கரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. இந்த கட்டணம் அதி விரைவு ரயில்களுக்கு பொருந்தாது. இந்நிலையில் நேற்று 27.02.24 முதல் பாசஞ்சர் ரயில் வண்டி எண் பூஜ்ஜியத்தில் தொடங்கும் அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களிலும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டண குறைப்பால் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு பயணம் செய்ய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தவிர, மற்ற அனைத்து பயணிகள் ரயில்களிலும் கட்டணமாக 20 ரூபாயும், குறைந்த பட்சம் 10 ரூபாயும் பெறப்பட்டு மீண்டும் சாதாரண கட்டணத்தில் டிக்கெட் வழங்க தென்னக இரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story