சுங்க சாவடிகள் அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்வு - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

சுங்க சாவடிகள் அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்வு - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

செய்தியாளர் சந்திப்பு 

தமிழ்நாட்டில் சுங்க சாவடிகள் அதிகமாக இருப்பதனால் தான் ஆம்னி பேருந்துகளில் இருக்கை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் சங்க தலைவர் கொடைக்கானலில் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் மற்றும் ஆப்ரேட்டர் சங்க நிறுவன தலைவர் ஜெயம் பாண்டியன் தெரிவித்ததில்,இந்த சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க தமிழக அரசு தடை விதித்தது, இதனையடுத்து மூன்று ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் இணைந்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்க எந்த வித தடை ஆணையம் இல்லை என உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது,இதன் அடிப்படையில் நேற்று முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது,தமிழகத்தில் மட்டும் ஆம்னி பேருந்துகள் இயக்க உள் மாநில பெர்மிட்டுகள் வாங்குவதற்கு அனைவரும் முனைப்புடன் செயல்படுகின்றனர்,

ஆல் இந்தியா பெர்மிட் பெற்ற ஆம்னி பேருந்துகள் இந்தியா முழுவதும் இயக்கவும் உள் மாநில பெர்மிட்டுகள் உள்ள ஆம்னி பேருந்துகள் உள் மாநிலத்தில் மட்டும் இயக்க தீர்மானத் நிறைவேற்றப்பட்டுள்ளது,மேலும் வெளிமாநிலத்திற்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை சில அரசு அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனர்,அவர்கள் மீது நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்,மேலும் பல்வேறு இடங்களில் பிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை உடனே எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார், விழா காலங்களில் இருக்கை கட்டணம் உயர்த்தப்படுவதாக எழுப்பிய கேள்விக்கு வார விடுமுறை நாட்களில் மட்டும் பேருந்து இருக்கைகள் நிரம்புவதாகவும்,மற்ற நாட்களில் குறைவாக டிக்கெட்கள் மட்டும் பதிவு செய்வதால் இது போன்று கட்டணம் உயர்த்தப்படுவதாக அனைத்து சங்கத்தினரும் இணைந்து தெரிவித்தனர்,

மேலும் சீசன் காலங்களில் அறை கட்டணம் உயர்த்தப்படுகிறது,7 மணிக்கு மேல் கம்பெனிகளுக்கு பயன்படும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது, இது குறித்து கேள்வி எழுப்பாமல் தாங்கள் இயக்கும் பேருந்துக்கு மட்டும் கேள்வி எழுப்புகின்றனர்,நாங்கள் பேருந்துகள் தினசரி இயக்கப்படுவதனால் விடுமுறை நாட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டும்,விடுமுறை இல்லாத மற்ற நாட்களில் குறைவான கட்டத்தில் இயக்க பேருந்தை பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தனர்,மேலும் ஆம்னி பேருந்து இயக்குவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு என தொகை நிர்ணயித்தால் நிரத்தர கட்டணம் வசூல் செய்வோம் என்றும்,இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்து எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,வெளி மாநிலத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளை அரசே எடுத்து நடத்துனரை பணியில் அமர்த்தி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டண தொகை வழங்குவதாக தெரிவித்தார்,

இது போன்று தமிழக அரசு தனியார் பேருந்துகளை இயக்க முன் வர வேண்டும் எனவும் மேலும் ஆம்னி பேருந்து இருக்கை கட்டணம் அந்தந்த பேருந்து புக்கிங் அலுவலங்களில் அதிகமாக இருப்பதாகவும்,ஆன் லைனில் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன என எழுப்பிய கேள்விக்கு பயணிகள் புக் செய்வது பொறுத்து நாங்களே ஆன் லைனில் டிக்கெட் கட்டணம் குறைப்பதாக தெரிவித்தனர், இந்தியா முழுவதும் ஆம்னி பேருந்துகளை இயக்க ஒன் இந்தியா பெர்மிட் வழங்கப்படுகிறது,இதனை வைத்து இந்தியா முழுவதும் இயக்கப்படுகிறது,

இதனை தமிழ்நாட்டில் மட்டும் தான் நடைமுறைப்படுவில்லை என்றும் இங்கு பெர்மிட்க்கு அதிக கட்டணம் தமிழக அரசு வசூலிப்பதாக குற்றம்சாட்டினர், மேலும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ள சுங்க சாவடிகள் இருப்பதனால் ஆம்னி பேருந்துகளின் இருக்கை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மத்திய,மாநில அரசுகள் அதிக டேக்ஸ்கள் விதிப்பதாகவும் ரோடு டேக்ஸ் விதிப்பதாகவும்,இதற்கு ரோடு டேக்ஸ் விதித்தால் சுங்க சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் இதனை நடைமுறை படுத்தினால் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார் இது குறித்து நிதின் கட்கரியிடம் சுங்க சாவடியை அகற்ற வேண்டும் இல்லையெனில் ஆம்னி பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனு அளித்ததாகவும் மேலும் வெளிமாநில பேருந்துகளை பதிவு எண்ணை தமிழ்நாட்டு பதிவு எண்ணாக மாற்றி கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் பேருந்துகளை இயக்கபோவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story