சேலத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைப்பு

சேலத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைப்பு

சேலத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சேலத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலத்தில் இருந்து இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரெயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாசஞ்சர் ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டன. இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டது.

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் பாசஞ்சர் ரெயில்களின் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பாசஞ்சர் ரெயில்களின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரெயில்களில் இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரூ.40-ல் இருந்து ரூ.20 ஆகவும், விருத்தாசலத்துக்கு ரூ.65-ல் இருந்து ரூ.35 ஆகவும், கரூருக்கு ரூ.50-ல் இருந்து ரூ.25 ஆகவும், ஜோலார்பேட்டைக்கு ரூ.60-ல் இருந்து ரூ.30 ஆகவும், மேட்டூருக்கு ரூ.30-ல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story