சித்திரை திருவிழாவின் 4ம் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவின் 4ம் நாளில் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்ற நாள் முதல் தினமும் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்து வருகிறார்.

அந்த வகையில் நான்காம் நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வில்லாபுரம் பகுதியில் உள்ள பாகற்காய் மண்டக்கப்படியில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவடை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை மனோ கார்ஸ் மனோகரன் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர் முன்னதாக அருள்மிகு ஸ்ரீ குப்பாயி அம்மன் கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருக்கல் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார். நிகழ்வில் சடச்சியம்மாள் முத்துப்பாண்டி முத்துலட்சுமி மணிகண்டன் சத்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் வழிநெடுகிலும் உள்ள மண்டகப் பணிகளுக்கு சுவாமி எடுத்துச் செல்லப்பட்டது.

Tags

Next Story