நாமக்கல் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பிரியாவிடை

தாளாளர் கணபதி வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை டிப்ளமோ மாணவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பி.எஸ்சி. இளங்கலை இரண்டாமாண்டு வேளாண்மை படிக்கும் மாணவர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். தோட்டக்கலைத்துறை உதவிப் பேராசிரியரும், மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், இறுதியாண்டு வேளாண்மை டிப்ளமோ மாணவர்களுக்கு சிறப்புப் பண்புகளை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார் மேலும் அவர் பேசுகையில். பசுமைக்குடில், மருத்துவத் தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றை அமைப்பதில் அவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு பாராட்டினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கோபால் தலைமையுரையாற்றி பேசுகையில்.. மாணவர்கள் கடந்த இரண்டாண்டுகளின் சாதனைகளை விளக்கி கூறினார். பிஜிபி நிறுவனத்தின் தாளாளர் கணபதி சிறப்புரையாற்றி, வளாக நேர்காணலின் போது பல்வேறு நிறுவனங்களில் விற்பனை அதிகாரிகளாகவும், கள அதிகாரிகளாகவும் பதவிகளைப் பெற்ற 16 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இறுதியாண்டு வேளாண் டிப்ளமோ மாணவர்கள், தங்கள் நேசத்துக்குரிய நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.செல்வி நிஷா அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியாக முதலாம் ஆண்டு டிப்ளோமா பயிலும் செல்வன் ஸ்ரீகாந்த் நன்றியை தெரிவித்தார்.

Tags

Next Story