மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி

மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி

பயிர் மேலாண்மை பயிற்சி பள்ளி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி மூலப்புதுரில் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவன் நலத்துறை சார்பில், மூலப்புதுர் கிராமத்தில் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் தவமணி தலைமை வகித்தார். வட்டாரதொழில்நுட்ப மேலாளர் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர், சின்டா தனியார் பூச்சி மருந்து நிறுவன கள மேலாளர் சிலம்பரசன். களை மேலாண்மை பற்றி விரிவாக எடுத்து கூறினர். தந்தை ரோவர் கல்லூரி வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள்,மக்காச்சோள பயிரில் பண்ணை பள்ளி பயிற்சிஊரக வேளாண் பணி அனுபவம் மாணவர்கள், மக்காசோள பயிரில் பொட்டாசியம் குறைபாடு, களை மேலாண்மை பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story