சிவகாசியில் வேளாண்த்துறை சார்பில் விவசாயிகளுக்கு பண்ணைபள்ளி பயிற்சி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம்,விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ், நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா தலைமை வகித்து பேசும்போது, வேளாண்மைத்துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்), வளர்மதி முன்னிலை வகித்தார். சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி வேளாண்மைத்துறை மூலம் சிவகாசி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்ட விபரங்களை எடுத்து உரைத்தார்.
இப்பண்ணைப் பள்ளி வகுப்பில் விவசாயிகளுக்கு மண்மாதிரிகள் எடுக்கும் முறைகள்,விதை நேர்த்தி செய்தல் ஆகியவை செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பண்ணைப்பள்ளி வகுப்பில் சிவகாசி வட்டார துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன்,உதவி வேளாண்மை அலுவலர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிவகாசி,வட்டார தொழில்நுட்ப மேலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் இராஜேஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்தானலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.