நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி

நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி

வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தில் கீழ் அத்திப்புலியூர் கிராமத்தில் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது


வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தில் கீழ் அத்திப்புலியூர் கிராமத்தில் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது

வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தில் கீழ் அத்திப்புலியூர் கிராமத்தில் நெற்பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் பெ. தெய்வேந்திரன் கலந்து கொண்டு நெல் வயலில் நேரடியாக இறங்கி விவசாயிகளிடம் நன்மை செய்யும் பூச்சி மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை பற்றி எடுத்துரைத்தார். நன்மை செய்யும் பூச்சியான தட்டான், சிலந்தி, பொறிவண்டு, தரைவண்டு, குளவி ஆகியவையகும். தீமை செய்யும் பூச்சிகளான இலைப்பேன், தண்டு துளைப்பான், இலைசுருட்டு புழு, பச்சை தத்து பூச்சி, ஆகியவற்றை நேரடியாக வயலில் ஆய்வு செய்து ஒருங்கிணைத்த பூச்சி நிர்வாகம் செய்யுமாறு விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள் வினியோகம், மண்புழு உரத் தொட்டி அமைத்தல், மானாவரி சாகுபடி திட்டம், வேளாண்மை காடு வளர்ப்பு திட்டம், உயிர்ம மேலாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் உருவாக்குதல், மற்றும் ஆடாதோடா, நொச்சி நடவுப் பொருள்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தல், போன்ற இனகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் அத்தி புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 28 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் வேளாண்மை உதவி அலுவலர் பழனிசாமிமண் மாதிரி சேகரித்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார் . பயிற்சியினை உதவி தொழில்நுட்பம் மேலாளர் மாசேதுங் அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story