மது போதையால் தொடர் வயிற்று வலி- விரக்தியில் விவசாயி தற்கொலை

மது போதையால் தொடர் வயிற்று வலி- விரக்தியில் விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

கரூர் மாவட்டம், சின்னமுத்தம் பாளையம் பகுதியில் மது போதையால் தொடர் வயிற்று வலியால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆரியூர் அருகே உள்ள சின்னமுத்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செல்வராஜ் வயது 55. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வந்தார். அண்மைக்காலமாகவே செல்வராஜ் மது போதைக்கு அடிமையாக இருந்ததால், நாள்தோறும் மது குடித்து வந்தார். இதனால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.

அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலியால் விரக்தி அடைந்த செல்வராஜ், மார்ச் 29ஆம் தேதி இரவு 9 மணி அளவில், பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். செல்வராஜின் தந்தை பழனிச்சாமி செல்வராஜை மீட்டு, உடனடியாக கோவையில் உள்ள கேஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் மூன்றாம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக உயிரிழந்த செல்வராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story