இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - விவசாயி பலி

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - விவசாயி பலி
X

விவசாயி பலி

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
சிவகங்கை அருகே ஒக்கூர்‌ பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் அழகுப்பாண்டி. இவர் ஒக்கூர் இந்திரா நகரில் உள்ள தனது வயலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற‌ நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் என்பவர் ஓட்டி வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அழகுப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விவசாயி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story