மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
பைல் படம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள வெள்ளமன் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் விவசாயி. இவர் நேற்று பூச்சூரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அந்தபகுதியில் சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்தது. இந்த காற்றுக்கு கேபிள் டி.வி. ஒயர் அறுந்து விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பி மீது விழுந்தது. இதனால் பரமசிவம் ஓயரை அப்புறப்படுத்துவதற்காக கையில் எடுத்துள்ளார். அந்த கேபிள் டி.வி. ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி பரமசிவம் தூக்கி வீசப்பட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவம் னைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.