தோட்டத்தில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

தோட்டத்தில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

சங்ககிரி அருகே கிணற்றில் தவறி விழுந்தது விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் (84) இவர் தனது தோட்டத்தின் கிணற்றின் மோட்டார் அறையருகில் புற்களை பிடுங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்த அவரது மனைவி மோட்டார் அதை அருகில் தடி மற்றும் செருப்பு இருந்ததை கண்டு தனது கணவர் பழனியப்பன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகமடைந்து சங்ககிரி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் சடலமாக கிடந்த பழனியப்பனை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story