மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

 நத்தம் அடுத்துள்ள மேலமேட்டுப்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி காளிமுத்து.

நத்தம் அடுத்துள்ள மேலமேட்டுப்பட்டியில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள மேலமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (73). விவசாயி. இவர் தோட்டத்தில் மின்சாரம் வராததையடுத்து செல்லப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி வயரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில காளிமுத்து பலியானார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story