மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை(45) இவர் விவசாய கூலி வேலை மற்றும் அவ்வப்போது மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பணிபுரியும் சட்டநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மின் நிறுத்தம் ஆகிய நிலையில் அதனை சரி செய்வதற்காக மின்கம்பம் மீது ஏறி சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து அங்குள்ளவர்கள் பனவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த அவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினரின் உதவியோடு அவரை கீழே இறக்கி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.