சரக்கு லாரி மோதி விவசாயி பலி

சரக்கு லாரி மோதி விவசாயி பலி

விவசாயி பலி 

திருப்பூர் பூலுவபட்டி பகுதியில் சரக்கு லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதி சேர்ந்தவர் பெரியசாமி (வயது 48).விவசாயி.இவர் சம்பவத்தன்று திருப்பூர் பூலுவபட்டி பூண்டி ரிங்கோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி மொபட் மீது மோதியதில் பெரியசாமி படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story