வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உழவர் மேளா

வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உழவர் மேளா

வேளாண் பயிற்சி 

சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில சின்னவேலம்பட்டியில் நடந்த மலை கிராம விவசாயிகளுக்கான உழவர் மேளா நிகழ்ச்சியில் சிறுதானிய சாகுபடி குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அருநூத்துமலை அருகே சின்னவேலம்பட்டி மலை கிராம விவசாயிகளுக்கான உழவர் மேளா நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுதானியங்கள் சாகுபடி, விதை உற்பத்தி, மதிப்பு கூடுதல், மண்வள மேலாண்மை, சந்தைப்படுத்துதல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் கலந்து கொண்டு, வேளாண்மை அறிவியல் நிலைய செயல்பாடுகள், மலை கிராம மக்களுக்கான திட்டங்கள், சிறுதானியங்களில் விதை உற்பத்தி பற்றியும் விளக்கி பேசினார்.

மண்ணியல் தொழில்நுட்ப வல்லுனர் சந்திரசேகரன், வெள்ளை மற்றும் சிவப்பு சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் பற்றியும், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் மாலதி, பிரெஞ்சு பீன்ஸ் போன்ற காய்கறி பயிர்களில் நவீன சாகுபடி முறைகள், சிறுதானிய பயிர்களில் மதிப்பு கூடுதல் செய்தல் பற்றியும் விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தக்கை பூண்டு விதைகள், சோள விதைகள், பேசில்லஸ் என்ற எதிர் உயிர் பூஞ்சாணம், தென்னங்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story