விவசாயி தற்கொலை
தற்கொலை
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரிமங்கலம் அருகேயுள்ள நாகனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி விவசாயி. இவரது 2 மனைவிகளும் இறந்து விட்டனர். 2 வது மனைவிக்கு குழந்தைகள் இல்லை. முதல் மனைவியின் மகன் சுந்தர்ராஜ் பராமரிப்பில் கோவிந்தசாமி வாழ்ந்து வந்தார். கடந்த 6ம் தேதி, கோவிந்தசாமி கோவையில் உள்ள மருத்துவமனையில் கண்ணில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து அவருக்கு அடிக்கடி கண்ணில் வலி இருந்து வந்தது.
நேற்று அவருக்கு வலி ஏற்பட்டதில், வலி தாங்க முடியாமல் விஷத்தை குடித்து மயங்கினார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோவிந்தசாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story