விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை

விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை

தற்கொலை 

விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 45). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இதுபற்றி அவரது மனைவி கலைவாணி கஞ்சனூர் போலீசில் புகார் செய்தார். அதில் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் தனது கணவர் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார்.

அந்த பணத்தை வட்டியுடன் திரும்பி கொடுத்த பின்னரும், கன்னியப்பனிடம் பணம் கேட்டு தரக் குறைவாக, அந்த நபர் திட்டினார். இதனால்மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார்விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story