விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணமூர்த்தி

போலி ஆவணம் தயாரித்து தனது விவசாய நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 64), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் 8 சென்ட் நிலம் உள் ளது. ரூ.80 லட்சம் மதிப்புள்ள இந்த நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் பலமுறை புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து, தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைசற்றும் எதிர்பாராத அங்குபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த் தியை தடுத்து நிறுத்தி அவர் மீது தீய ணைப்புத்துறை வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பின்னர், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்குகொண்டு செல்வதாக போலீசார் கூறியதோடு, கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்றும் அவரை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story