ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி மரணம்

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி மரணம்

தீக்குளித்தவர் மரணம் 

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த 13ஆம் தேதி விவசாயி சங்கர சுப்பு தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி தனது உடலில் தீ வைத்து கொண்டார். இதில் 90% காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story