மலைக்கிராமங்களில் முகாமிட்ட காட்டுயானைகளால் விவசாயிகள் அச்சம்
காட்டு யானைகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் யானைக் கூட்டங்கள் தொடர்ந்து முகாமிட்டு விவசாயப் பயிர்களையும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தினை உருவாக்கி பெரும் சவாலை கொடுத்து வருகின்றன.வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் புலியூர், கோம்பை பகுதியில் 4-க்கும் மேற்பட்ட யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டப் பகுதியில் முகாமிட்டுள்ளன,
மேலும் வெயிலின் தக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியின் பிடியினால் விவசாயம் அழிந்து வரும் நிலையில் தற்போது முகாமிட்டிருக்கும் யானைக் கூட்டங்களால் புலியூர், கோம்பை பகுதி விவசாயப் பயிர்களை யானை சேதப்படுகுவதற்கு முன்பு கொடைக்கானல் வனத்துறையினர் விரைவில் யானைக் கூட்டங்களை விரட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலியூர், கோம்பை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.