கும்பகோணம் அருகே கீரை விதை தூற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கும்பகோணம் அருகே கீரை விதை தூற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கீரை விதை தூற்றும்  விவசாயிகள்

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் கீரை விதை தூற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் கீரை விதை தூற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 1 கிலோ விதை ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வு கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும். இங்கு குறுவை,

சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். உணவு பொருட்களில் அரிசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போல் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடலுக்கு தேவையான சத்துக்களை வாரிவழங்குவதில் கீரைகளுக்கு முதலிடம் உண்டு. ஆரோக்கியமான வாழ்வுக்கு தினசரி உணவில் கீரை சேர்ந்து கொள்ளவேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

இதனால் ஆண்டு தோறும் கீரைகளுக்கான தேவை அதிகம் உள்ளது. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட கோடை சாகுபடி எவ்வளவு சாகுபடி செய்வது போல் பட்டீஸ்வரம் திருமற்றம்களிகை, சோழன்மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் கீரை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கும்பகோணத்திற்கு ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அதே போல் மேற்கண்ட பகுதிகளுக்கு கீரை தான் சிறப்பு. இந்த பகுதியில் கீரை சாகுபடி செய்ய தேவையான வசதிகள் உள்ளன.

இதனால் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த பகுதிகளில் வந்து கீரை சாகுபடி செய்வார்கள். அவா் சாகுபடி செய்யப்படும் கீரையை குறிப்பிட்ட நாட்களுக்கு அறுவடை செய்து தாராசுரம் காய்கறிமார்க்கெட், உழவர் சந்தை, கும்பகேணத்தில் உள்ள பல்வறே இடங்களில் வீதி வீதியாக கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

கீரை அறுவடை செய்த பின்னர் மீண்டும் வளர்ந்து வரும் பகுதிகளை விற்பனை செய்ய நினைப்பவர்கள் அறுவடை செய்வார்கள். காய்கறிகள்-கீரைகள் அவ்வாறு இல்லாத நிலையில் அதனை நன்றாக வளர விட்டு விதைக்கு தயார் செய்வார்கள். கீரை நன்றாக வளர்ந்து பூக்கள் பூத்தவுடன் அதனை அறுவடை செய்து சாலையில் கொட்டி பூக்களில் இருந்து விதையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். சாலையில் கொட்டப்பட்டிருக்கும் கீரைபூக்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள்ஏறி செல்லும் போது பூவில் இருந்து விதை தனியாக பிரிந்து விடும்.

அதன்பின்னர் தூசிகளுடன் இருப்பதை முறம் கொண்டு தூற்றி விதையை தனியாக பிரித்து விதை விற்பனை நிலையம் மற்றும் தனியார் வியாபாரிகளிடம் விற்பனைக்கு அனுப்பி விடுவார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னை சாகுபடி செய்தால் பயன்பெற பல ஆண்டுகள் ஆகும். கரும்பு, வாழை, நெல் ஆகியவை சாகுபடி செய்தால் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் குறைந்த காலத்தில் உடனே பலன் தருவது காய்கறிகள் மற்றும் கீரைகள் தான்.

காய்கறிகளும் கீரைகளும் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான விவசாயிகள் அதனை சாகுபடி செய்வதில் தயக்கம் காட்டுகிறோம். கீரை சாகுபடி செய்த 30 நாட்களுக்குள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் கீரை 100 முதல் 150 கட்டுகள் வரை அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு கட்டுகளும் ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

கீரையை முதற்கட்டம் அறுவடை முடிந்தவுடன் அதனை அடுத்த அறுவடைக்கு அல்லது விதைக்கு தயார் செய்வோம். பெரும்பாலும் விதைக்கு தான் தயார் செய்வோம். 1 கிலோ விதை ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு செலவுகள் உள்ள நிலையிலும் பாரம்பரியம் கீரைகள் மறைந்து விட கூடாது என்பதற்காக சாகுபடி செய்கிறோம் என்றனர்.

Tags

Next Story