குப்பைத் தொட்டியாக மாறிய பெட்டைக்குளம் விவசாயிகள் அதிருப்தி

குப்பைத் தொட்டியாக மாறிய பெட்டைக்குளம் விவசாயிகள் அதிருப்தி

குப்பைத் தொட்டியாக மாறிய பெட்டைக்குளம் 

 

குப்பையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் தொட்டியான்குளம், குமிழன்குளம், பெட்டைக் குளம் ஆகியவை பொதுப்பணித் துறை பராமரிப்பின் கீழ் வருகிறது. இதில், பெட்டைக் குளத்திற்கு அண்மைக் காலமாக தண்ணீா் வரத்து முற்றிலும் நின்று விட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி பரப்பளவு குறைந்துள்ளது. ஆலங்குளம், நல்லூா், குருவன்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 1000 ஏக்கா் விளை நிலங்கள் பயன்தரும் இந்தக் குளத்தை வருவாய்த்துறையினா் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரவேண்டும் அங்கு கொட்டி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Tags

Next Story