எலுமிச்சம் பழம் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி !

எலுமிச்சம் பழம் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி !
எலுமிச்சை 
புளியங்குடியில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுற்றியுள்ள புளியங்குடி, சேர்வைக்காரன்பட்டி அருணாச்சலம்பட்டி, பாப்பான்குளம் கட்டேரிபட்டி, செல்ல பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி அதிக அளவு விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இதன் விவசாய நிலங்களில் விளைச்சல் குறைந்ததால் எலுமிச்சம் பழம் வரத்து குறைவாக உள்ளதால் விலை ஏறுமுகமாக உயர்ந்தது. இன்று முதல் ரகம் எலுமிச்சை ஒரு கிலோ ரூ. 80 லிருந்து ரூ. 150 ஆகவும், 2வது ரகம் ரூ. 80 லிருந்து ரூ. 100 உயர்ந்துள்ளது. இதனால் புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story